Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பஞ்சரான விமானம்…. கைகளால் தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்….!!!!

நேபாளத்தில் விமானம் ஒன்றை கைகளால் தள்ளி சென்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

காத்மண்டு நகரை தலைமையிடமாகக் கொண்ட ஈடி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பஜ்ரா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து பஞ்சர் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |