Categories
மாநில செய்திகள்

பஞ்சாங்கம் வாசிப்பு: தமிழகத்தில் 7 புயல்கள் உருவாகும்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!

நடப்பு ஆண்டு தமிழகத்தில் 7 அதிதீவிர புயல்கள் உருவாகி பலத்த மழை பெய்து, வெள்ளத்தில் மிதக்கும் என்று ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில், கோவில் குருக்கள் உதயகுமார், ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது “வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி, 7 அதிதீவிர புயலாக வீசும். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் தென்னை, மா, பலா, வாழை விளைச்சல் நன்றாக இருக்கும்.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை மேலும் உச்சம் தொடும். அதன்பின் கோயில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய நிலை உருவாகும். அடுத்ததாக சில அரசியல் தலைவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை புது தொழிலில் முதலீடுசெய்து பெரும் நஷ்டத்தை சந்திப்பர். நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பார்த்து சீனா, பாகிஸ்தான் பொறாமையில் பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளும். அதனை தொடர்ந்து அது பயனின்றி போகும். அத்துடன் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும். வெட்டுக்கிளிகளால் கோதுமை பயிர் அழியும், மின்காந்த அலைகளால் மொபைல் போன் டவர் சேதமாகும். இந்திய கடல் வழியே போகும் ஒரு வெளிநாட்டு சரக்கு கப்பல் நள்ளிரவில் தீக்கிரையாகும் அபாயம் இருக்கிறது. புதிய வைரஸ் பரவி மக்கள் காய்ச்சலில் பாதிக்கப்படுவர் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |