Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப்: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு… சரமாரியாக கேள்வி எழுப்பிய மந்திரி…. பரபரப்பு….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்மந்திரியாக பகவந்த் மான் இருந்து வருகிறார். அண்மையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜுரமஜ்ரா, சண்டிகர் ரீத் கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மருத்துவமனை படுக்கைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த மந்திரி, ஏன் மெத்தைகள் இவ்வளவு அழுக்காக உள்ளது என்று கேள்வி எழுப்பியதுடன், பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ராஜ்பகதூரை அழைத்து இதுதான் நீங்கள் மருத்துவமனையை நிர்வகிக்கும் லட்சணமா..? இதில் நோயாளிகள் எப்படி படுப்பார்கள், இது போன்ற படுக்கைகளில் நீங்கள் படுப்பீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அத்துடன் துணை வேந்தரை அந்த படுக்கையில் படுக்குமாறு கூறினார். அதன்பின் துணை வேந்தர் டாக்டர் ராஜ்பகதூர் அந்த மெத்தையில் படுத்து காண்பித்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மந்திரியின் இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சுகாதாரத்துறை அமைச்சரின் செயலை கண்டித்துள்ளதுடன், ஆம்ஆத்மி இதுபோன்ற நாடகங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

Categories

Tech |