பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது :”ஒரு மனிதன் எப்போதும் சமரசம் செய்து கொள்கிறானோ? அப்போது அவனுக்கு நன்மதிப்பு குறைகின்றது. நான் பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் நலனில் என்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன்.
இருப்பினும் காங்கிரசுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்திருந்தார். முன்னதாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே மோதல் நிலவிவந்த காரணத்தினால் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.