Categories
தேசிய செய்திகள்

“பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு”…. இனி இது கிடையாது…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்து ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம்செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள். பெட்ரோல் பம்புகளில் எண்ணெய் வாங்க டிஜிட்டல் பேமெண்ட் வாயிலாக பணம் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட 0.75 % தள்ளுபடியை பெட்ரோலியம் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் திரும்பப்பெற்றுள்ளன.

அவ்வப்போது கார்டு வாயிலாக பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்குபவர்கள் மீது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பொதுத் துறை பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) இந்த நன்மையை வாடிக்கையாளர்களுக்கு மாற்றுவதை நிறுத்தியிருக்கிறது. இது பி.என்.பி-யின் 18கோடி வாடிக்கையாளர்களை பாதிக்கும். இதனிடையில் மே மாதம் முதல் பிஎன்பி இந்த தள்ளுபடியின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டது.

இதையடுத்து பெட்ரோலிய மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (ஓஎம்சி-கள்) இந்த வசதியை திரும்பப்பெற்றுள்ளதாக வங்கி தெரிவித்து உள்ளது. பிஎன்பி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் (ஐஓசி, பிபிசிஎல், எஹ்பிசிஎல்) டிஜிட்டல் முறையில் பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வாங்குவதற்கு அளித்து வந்த 0.75 % தள்ளுபடியை வாபஸ் பெற்றதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) தெரிவித்து உள்ளது. மேமாதம் முதல் வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடியின் பலனை வழங்குவதை நிறுத்திவிட்டதாக பிஎன்பி தெரிவித்து இருக்கிறது.

என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணங்கள் அதிகரிப்பு:

முன்பாக என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணங்களையும் பி.என்.பி உயர்த்தியது. வங்கியால் செய்யப்பட்ட இம்மாற்றம் மே 20, 2022 முதல் நடைமுறைக்கு வந்தது. பி.என்.பி-ன் படி ஆர்டிஜிஎஸ் கட்டணங்கள் ஆப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 24.50 ஆகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 24 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக கிளை அளவில் ஆப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஆர்டிஜிஎஸ்- க்கு இத்தொகை ரூபாய் 20 ஆக இருந்தது.

Categories

Tech |