பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இருந்து வருகிறார். இந்நிலையில் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதாவது, சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறையினர் சுமார் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் முதல்வரின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Categories