Categories
தேனி மாவட்ட செய்திகள்

பஞ்சாப் முதல்வரை கண்டித்து…. உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்…. தேனியில் பரபரப்பு….!!

பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்தும், அவர் உருவ பொம்மையை எரித்தும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற்பதற்க்காக சென்றுள்ளார். அப்போது சிலர் பிரதமர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விழாவை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் திரும்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரதமருக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங்கை கண்டித்தும், அவரது தலைமையிலான ஆட்சியை கலைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிர்வாகிகள் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

இதற்கிடையே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒரு காவல்துறை அதிகாரி தங்களை விமர்சித்ததாக கூறி கட்சியினர் திடீர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பால் சுதிர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்பு கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு சாலையோரம் சென்று தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |