பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. கடந்த 7-ம் தேதி பக்வந்த் மானுக்கு, மருத்துவரான குர்ப்ரீத் கவுருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Categories