Categories
உலக செய்திகள்

பஞ்சாப்: “முதல் மந்திரி தேர்தல்”… தோல்வியடைந்த இம்ரான்கான் போராட்டத்திற்கு அழைப்பு….!!!!

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் சென்ற ஏப்ரல் மாதம் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எதிர்க் கட்சி தலைவராகயிருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவ்வாறு ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று இருப்பதை ஏற்க மறுத்துவரும் இம்ரான்கான் தன் ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி உள்ளதாக கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் புது அரசுக்கு எதிராக தன் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான் கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அண்மையில் இடைத் தேர்தல் நடந்தது. 20 இடங்களுக்கு நடந்த தேர்தலில் இம்ரான் கானின் (பிடிஐ)பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி 15 இடங்களில் வெற்றி பெற்றது.

நவாஸ்ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (பிஎம்எல்-என்) – நவாஸ் கட்சி 4 இடங்களையும், சுயேட்சை 1 இடத்தையும் கைப்பற்றியது. பிடிஐ மற்றும் பிஎம்எல்-கியூ கட்சிகளின் பொதுவேட்பாளர் பர்வைஸ் இலாஹி 186 வாக்குகளையும், எதிர்த்து களமிறங்கிய பிஎம்எல்-என் கட்சியின் ஹம்சா ஷாபாஸ் 179 வாக்குகளையும் பெற்றனர். எனினும் பல்வேறு காரணங்களுக்காக பிஎம்எல்-கியூ கட்சி வாக்குகள் பஞ்சாப் சட்டமன்ற துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. ஆகவே குறைந்த வாக்குகள் பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம்லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஹம்சா ஷாபாஸ் மீண்டுமாக பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு இம்ரான்கான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

பஞ்சாப்பின் முதல்மந்திரி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டத்திற்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது “பஞ்சாபில் முழுமையான கேலிக்கூத்து இது. இருப்பினும் ஆட்சியில் நீடிக்க எந்தஎல்லைக்கும் போகும் இந்த ஊழல் அரசிடமிருந்து வேறுஎன்ன எதிர்பார்க்க முடியும். இன்று இவ்வாறு நடைபெறுவதால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும். இன்று என் தேசம் இச்செயலுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். அனைவரின் பார்வையும் சுப்ரீம் கோர்ட்டின் மீது இருக்கிறது. அரசியல் பிரிவு 63 தெளிவாக இருக்கிறது” என்று அவர் கூறினார். பஞ்சாப் சட்டசபையில் பெரும்பான்மையானவர்களின் வாக்குரிமையை சட்ட விரோதமாக அரசு தடுத்ததை எதிர்த்து நாட்டின் பல நகரங்களில் மக்கள் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |