ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் கீழ் பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான விசைத்தறி கூடம் இருக்கிறது. இந்த கூடத்தில் 25 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று தறிகள் செயல்படுவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் பஞ்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதாவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தறிகளை வழக்கம்போல உடனே இயக்க வேண்டும். அத்துடன் தறிகளை நவீனப்படுத்த வேண்டும். அதன்பின் புது ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்த வேண்டும். அதனை தொடர்ந்து மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் போன்ற கோரகைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Categories