Categories
தேசிய செய்திகள்

பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து….. வெளியான அதிரடி அறிவிப்பு……!!!!

தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 % அடிப்படை சுங்கவரியும், 5 % வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகிறது. உள்நாட்டில் விலையைக் குறைக்கும் அடிப்படையில் இந்த வரிகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த முடிவால் ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |