Categories
மாநில செய்திகள்

பஞ்சு விலையால் முடங்கும் ஜவுளித்துறை….? தவிக்கும் பின்னலாடை நிறுவன ஊழியர்கள்….!!!!

தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது.

2020 -21ம் நிதி ஆண்டு துவக்கத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பஞ்சின் விலை அந்த ஆண்டு இறுதியில் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த அறுபது நாட்களில் மட்டும் பஞ்சு விலை கேண்டி ஒன்றுக்கு 12 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தரமற்ற பஞ்சு நூல் உற்பத்தியால் செலவினம் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆலைகள் பல்வேறு வழிகளில் நூல் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பின்னலாடை உற்பத்தி பயன்படுத்தப்படும் அனைத்து ரக ஒசைரி நூலின் விலையானது கிலோவுக்கு ரூபாய் 30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூபாய் 93 ஆயிரத்து 500 எட்டியுள்ளது. ஏற்கனவே தொற்று காரணமாக சிறு குறு பின்னலாடை நிறுவனங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது விலை ஏற்றத்தால் ஜவுளித்துறை முடங்கும் அபாயம் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |