Categories
சினிமா தமிழ் சினிமா

பஞ்ச் டயலாக் பேசிய பாலா … பதிலடி கொடுப்பாரா ஆரி? … வெளியான முதல் ப்ரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா ஆரியிடம் கேள்வி கேட்பதுபோல் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் இந்த வாரம் மீண்டும் தொடர்கிறது . கால் சென்டர் ஊழியராக ஆரியும்  காலராக பாலாஜியும் பேசுகிறார்கள். பாலாஜி, ஆரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கிறார்.

அதில் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று அடிக்கடி சொல்லுவீங்க ஆனா நீங்க யாரும் யாரையும் காலி பண்ணி விளையாடலயா? என்று கேட்கும் பாலாஜி அதன்பின் ‘நான் கெட்டவன்னு சொல்றவன நம்பலாம், நான் நல்லவன்னு சொல்றானே அவனை நம்பலாம் ,ஆனால் நான் மட்டும்தான் நல்லவன் சொல்றானே அவனை மட்டும் நம்ப கூடாது’ என பஞ்ச் டயலாக் அடிக்கிறார். பாலாவின் சரமாரியான கேள்விகளுக்கு ஆரி என்ன பதிலடி கொடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |