Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

படகில் சென்ற வாலிபர்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிளாஸ்டிக் படகில் சென்ற இளைஞர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளம் அருகே உள்ள வட்டான்வலசை பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமான் கடற்கரைக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து தயாநிதி அவரது சொந்த ஊரான புதுநகரத்திற்கு செல்வதற்கு மீனவர் ஒருவரின் பிளாஸ்டிக் படகில் ஏறி உறவினர்களுடன் பயணித்துள்ளார். அப்போது சிறிது தூரம் சென்ற பின்பு தயாநிதி படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக உச்சிபுளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தயாநிதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தயாநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |