தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் கொம்புத்துறையில் மார்ட்டின்(50) மற்றும் பிளவேந்திரன்(60) ஆகிய இருவரும் வசித்துவருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று அதிகாலையில் நாட்டு படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் நாட்டுப் படகு கவிழ்ந்து விழுந்தது. இதனால் இரண்டு மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அப்போது கடலில் மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று மாட்டினை மற்றும் காப்பாற்றி திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து காணாமல் போன பிளவேந்திரனை தேடும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் விரைந்து சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.