கன்னியாகுமரி கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி அருகே இருக்கும் கடலில் பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை ஏற்பாடு செய்தவர் இடிந்தகரை கிராமத்தில் உள்ள அன்ரன், டைட்டஸ், இம்ரான் ஜூலியன் ஆகும். மேலும் இப்போட்டி 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு கோவளத்ததிலிருந்து இடிந்த கரை உள்ள தெளிப்பாமுனை கடற்கரை வரை நடத்தப் பட்டது. இதில் மொத்தம் 15 படகுகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு படகிலும் 10 மீனவர்கள் இருந்தனர் . இதனை தொடர்ந்து போட்டியை கொடியசைத்து கோவளம் பங்குச்சந்தை பீட்டர் தாஸ் தொடங்கி வைத்தார் ,அவர்களுடன் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ,சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் போட்டி காலை பத்து முப்பது மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
இதில் முதல் பரிசு பெற்றவருக்கு ஒரு பவுன் தங்கமும் இரண்டாம் பரிசு பெற்றவருக்கு முக்கால் பவுன் தங்கமும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு பெற்றவருக்கு அரை பவுன் தங்கமும், 5வது இடம் பிடித்த படகுக்கு வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்பட்டன.