Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தோல்விகளுக்கு காரணம் என்ன?…. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்….!!!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் என்னுடைய படத்தில் சில சொதப்பல்கள் வர என்ன காரணம் என்பதை அவர் கூறியுள்ளார். அதாவது தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் தற்போது வெளியாகும் படங்கள் எதுவும் அவ்வளவு வெற்றி பெறவில்லை.

இதனிடையே இந்த படத்தின் தோல்விகளும் கடனாலும் அவதிப்பட்டு வந்தார். அதன் பிறகு வெளியான டாக்டர் படத்தின் வெற்றியால் ஓரளவு மீண்டும் ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வைத்து வருகின்றார். இந்த நிலையில் நடுவில் ஏற்பட்ட சறுக்கலுக்கு என்ன காரணம் என்பதை சிவகார்த்திகேயன் தற்போது கூறியுள்ளார். அதாவது தன்னுடைய சில படங்களின் கதை கருவிலேயே பிரச்சனை இருந்ததாக கூறினார். ஆரம்பத்தில் என்னுடைய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் சில படங்கள் நன்றாக போகவில்லை. இதற்கு காரணம் என்ன என்று யோசித்தபோது, கமர்ஷியல் மட்டும் மக்களுக்கு போதாது, வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்பது தெரியவந்தது. அதைதான் இப்போது கொடுக்க முயற்சித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |