Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த படக்குழு…!!

விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது தயாரிப்பு பணியை ஊரடங்கு முடிந்தபின் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய நிறுவனங்களில் தமிழ் திரையுலகில் விஜயா ப்ரொடக்ஷனுக்கு முக்கிய பங்கு உண்டு. “எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, நம் நாடு”, “சிவாஜி கணேசன் நடித்த வாணி ராணி”, “ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி”, “கமலஹாசன் நடித்த நம்மவர்” , “அஜித் நடித்த வீரம்”, “விஜய் நடித்த பைரவா” உள்ளிட்ட வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த வருடம் விஜயா புரொடக்சன் தயாரித்து விஜய் சங்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் “சங்கத்தமிழன்” தோல்வியடைந்தது. பல வெற்றிப்படங்களை தயாரித்த பட நிறுவனம் இந்த படத்தில் தோல்வி அடைய காரணம் “டைரக்டர் சொன்ன கதை ஒன்று, படமாக்கிய கதை வேறு” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  தோல்வி ஏற்பட்டிருந்தாலும் இந்நிறுவனம் தொடர்ந்து படம் தயாரிக்கும் என கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற்றபின் விஜயா புரொடக்ஷன் தனது தயாரிப்பு பணியை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |