நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயின் ஆக நடிக்க, மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் லைகர் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் விரைவில் ரிலீசாக இருப்பதால் படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அந்த வகையில் பஞ்சாபில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக மாதம் முழுவதும் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இருவரும் பல இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஏற்கனவே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டேன். இந்த பயணத்தை நான் கடவுளின் ஆசீர்வாதமாக உணர்கிறேன். என்னுடைய அம்மா எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய பூஜையை நடத்தினார். எங்கள் பயணத்தை இனி தொடரும்போது என்னுடைய அம்மா நிம்மதியாக தூங்குவார் என்று பதிவிட்டுள்ளார்.
This whole month touring across India and receiving so much love already felt like God's blessing!
But Mummy feels we needed his protection 🙂
So Poooja 😌🙏 and sacred Bands for all of us 🥰
Now she will sleep in peace while we continue our tour 😘❤️#Liger pic.twitter.com/q6ew2HFzik
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 17, 2022