நடிகர் சாயாஜி ஷிண்டே ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிக்கிறார். “பாரதி” என்ற திரைப்படத்தில் சுப்ரமணி பாரதியாக சிறப்பாக நடித்து இருந்ததால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். மேலும் சாயாஜி ஷிண்டே வேலைக்காரன், வேலாயுதம், அழகிய தமிழ் மகன் ஆகிய அடுத்துதடுத்த திரைப்படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் போலீஸ் நிலையம் மற்றும் மராத்தி திரைத்துறை கழகத்தில் புகாரளித்துள்ளார். அதில், “நான் இயக்கக்கூடிய மராத்தி திரைப்படத்தில் சாயாஜி ஷிண்டே ஒப்பந்தமாகி இருந்தார். இதனால் அவருக்கு அட்வான்ஸ் 5 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளேன். இதற்கிடையில் கதையம்சம் சரியாக இல்லை எனக்கூறி அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இப்போது என்னிடம் வாங்கிய ரூபாய்.5 லட்சத்தை திருப்பித் தர மறுக்கிறார். இவ்வாறு படத்திலிருந்து அவர் திடீரென்று விலகியதாலும், வாங்கிய பணத்தை திருப்பி தராததாலும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் படம் வெளியாகுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே படத்துக்கான இழப்பிடை சாயாஜி ஷிண்டே கொடுக்கவேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சாயாஜி ஷிண்டே மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.