ஆறு வருடங்களுக்கு முன்பே பிரிவதாக இருந்த தனுஷ்-ஐஸ்வர்யா தற்போது பிரிந்திருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ஜனவரி 17ஆம் தேதி இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நாட்கள் ஆகியும் வலைத்தளங்களில் இதுவே வைரலாக இருக்கிறது. இவர்களுக்கிடையே சென்ற ஆறு வருடங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே 6 வருடங்களாக காத்திருக்கின்றனர். ஆனால் ஆறு ஆண்டுகள் முயற்சி செய்தும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.
இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்ததால் ஐஸ்வர்யாவின் மீது ரஜினி கோபத்தில் உள்ளாராம். இதனால் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது புதுப்படங்களில் ஒப்பந்தமாகிவிடுவாராம் தனுஷ். காரணம் வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்து விடலாம் என எண்ணி இருக்கிறார். தற்பொழுது ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். அவரது கவனத்தை படத்தின் மீது செலுத்தி வருகிறார்.