Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“படத்தில் நடிப்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்கிறார்கள்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பிரபல சீரியல் நடிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காவலன், ரம்மி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜானகிதேவி தற்போது சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள், கயல் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து இவர் கூறியுள்ளதாவது, நான் ஆரம்பத்தில் சினிமாவில் வருவதற்கு குடும்பத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை எல்லாம் தாண்டி தான் சினிமாவில் நடிக்க வந்தேன்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பெண்களுக்கு சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை. எங்கு சென்றாலும் வேலைக்கோ எதுவாக இருந்தாலும் அங்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். பெண்களுக்கு ஆண்கள் எப்படி நம்மிடம் பலகுகிறார்கள் என்பது தெரியும். தவறாக பழகினால் அங்கிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு பிரண்டா ஆன ஒருவரிடம் நிறைய பேர் நடிகையாக வேண்டும் என்றால் என்னை வந்து பார்க்க வேண்டுமென மெசேஜ் செய்கின்றனர். இது போன்ற தவறான அணுகுமுறைகளை பெரிய நடிகைகளிடம் காட்ட முடியாது. சினிமாவுக்காக ஏங்கும் நடிகைகளிடம் தான் இது போன்ற அணுகுமுறையுடன் நெருங்குகிறார்கள். இதுபோன்றவர்களிடமிருந்து நாம் விளங்கிக் கொண்டு செல்வதுதான் நல்லது. ஒரு நல்ல சினிமாக்காரர்கள் இது போல நடந்து கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |