யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் மற்ற மொழிகளிலும் படத்தை டப் செய்து வெளியிட்டனர். இந்த படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது. கே ஜி எஃப் படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. கேஜிஎப் திரைப்படம் முதல் நாளன்று 135 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் நேற்று வரை 320 கோடி வசூல் செய்து உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகமாக வசூல் செய்த ஆறாவது படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
மேலும் தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இறுதியில் நடிகர் யாஷ் அவர் சேர்த்து வைத்திருந்த மொத்த பணம் மட்டும் தங்க கட்டிகளுடன் கடலில் விழுந்து இறந்து போவது போல் இருக்கும். ஆனால் அவரை நம்பி இருந்த அனைத்து மக்களுக்கும் அவர் இறப்பதற்கு முன்பாகவே வீடுகட்டி கொடுத்திருப்பார். இது படத்தில் மட்டும் நடக்கவில்லை.
அவர் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு பல உதவிகளை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்தில் உள்ள 40 கிராமத்து மக்கள் தண்ணீர் இல்லாமல் பெரும் பஞ்சத்தை சந்தித்து வந்துள்ளனர், இதை கேள்விப்பட்ட நடிகர் யாஷ் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக 4 கோடி ரூபாய் செலவு செய்து அங்குள்ள ஏரியை தூர் வாரினார். பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் தானே அங்கு சென்று அவரே இறங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் கேஜிஎப் 1 திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை. அவர் படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு ஒரு ஹீரோவாக இருந்துள்ளார்.