Categories
மாநில செய்திகள்

படத்தையே மிஞ்சிய சேசிங்… எஸ்.ஐயின் துணிச்சல்… அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..!!

செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் இடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார்.

மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி பிடித்தார். இந்த காட்சிகள் அருகில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சினிமா பாணியில் இந்த சேஸிங் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரமேஷிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

https://www.youtube.com/watch?v=JEQB-EkB2BI&feature=youtu.be

Categories

Tech |