Categories
தேனி மாவட்ட செய்திகள்

படபிடிப்பிற்காக வந்த துணை நடிகை… திடீரென மாயம்… போலீஸ் நடவடிக்கை…!!

விருமன் திரைப்படத்திற்காக நடிக்க வந்த துணை நடிகை திடீரென மாயமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை பகுதியில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இணைந்து நடிக்கும் “விருமன்” திரைப்படத்திற்கான படபிடிப்புகள் தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. எனவே சினிமா படபிடிப்புக்கான ஆள் சேர்க்கும் ஏஜென்ட் அம்பிகா என்பவர் மூலம் பானுப்பிரியா தேனிக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து படபிடிப்பில் கலந்துகொண்டு அவருடன் நடிக்கும் துணை நடிகைகளுடன் தேனியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இதனைதொடர்ந்து பானுபிரியாவின் செல்போன் திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக விடுதியில் இருந்து சென்றுள்ளார். ஆனால் பானுபிரியா மீண்டும் விடுதிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஏஜென்ட் அம்பிகா பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் பானுபிரியா மாயமானது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பானுபிரியாவை தேடி வந்துள்ளனர். அப்போது அவர் கூடலூரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக கூடலூருக்கு சென்று பானுபிரியாவை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பானுப்பிரியா மனவுளைச்சல் ஏற்பட்டு கூடலூருக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |