Categories
தேனி மாவட்ட செய்திகள்

படபிடிப்பில் ஏற்பட்ட தகராறு…. யோகிபாபு உதவியாளர் காயம்…. டிரைவர் மீது வழக்குபதிவு….!!

திரைப்பட நடிகர் யோகிபாபுவின் உதவியாளரை தாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் யோகி பாபு நடிக்கும் வரும் “மலையோரம் வீசும் பூங்காற்றே” என்ற திரைபடத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மற்றும் கொட்டகுடி மலைப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி பாபுவிற்கு உதவியாளராக சேலத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து சதாம் உசேனுக்கும், யோகி பாபுவின் கார் டிரைவரான சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் ராமச்சந்திரன் சதாம் உசேனை ஆபாசமாக பேசி அவரை தாக்கியுள்ளார். இதில் சதாம் உசேனுக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |