நடிகர் சிவகார்த்திகேயன் டான் படப்பிடிப்பிற்கு இடையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் பல படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்து கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் உடன் இணைந்து அயலான் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
இதன் பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் டாக்டர் படத்தில் நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பை சமீபத்தில் சிவகார்த்திகேயன் முடித்தார். இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து உருவாக்குகின்றது. இப்படத்திற்கு டான் என படக்குழுவினர் பெயர் சூட்டப்பட்டுள்ளன.இந்த படத்தில் ஹீரோயினியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த் காளி, வெங்கட் பாலா, சரவணன், விஜய் சிவாஜி உள்ளிட்டோர் சில வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பிற்கு இடையில் டான் பட குழுவினருடன் இணைந்து சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடிய போது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.