Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் அடிபட்டு…. மயங்கி விழுந்த விஷால்…. வெளியான வீடியோ…!!!

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் எமினி படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்ததையடுத்து புதுமுக இயக்குனர் து.ப சரவணன் படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான சூட்டிங் பணிகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோருக்கிடையில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது ஏற்பட்ட விபத்தில் விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடிபட்டு மயங்கி விழுந்த விஷாலை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை பின்னர் விஷாலுக்கு முறையான பிசியோதெரபி அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |