Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு ரத்து…. என்னோட சம்பளத்தை குறைச்சிக்கோங்க…. நடிகர் அஜித் கடிதம்….!!

நடிகர் அஜித் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நீடித்து வரும் ஊரடங்கால் பல துறைகள் இயங்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பொழுதுபோக்கு துறையாக மக்களால் கருதப்படும் சினிமா துறை முடங்கியது பலருக்கு பெரிய பாதிப்பு தான். இதனால் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், டப்பிங் ஆர்டிஸ்ட், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், கதையாசிரியர்கள், அசிஸ்டன்ட் இன்னும் கண்ணுக்குத்தெரியாத சொல்லமுடியாத ஏராளமான பணிகளைச் செய்யக் கூடியவர்கள் வேலைகளை இழந்து தவிக்கிறார்கள்.

இந்த நஷ்டத்தை சமாளிப்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் நடிகர் சங்கம் சார்பாகவும் சமீபத்தில் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. தற்போது நடிகர் அஜித் அதனை நிறைவேற்றும் விதமாக அவர் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் ஊரடங்கால் சினிமா துறை முடங்கிக் கிடக்கிறது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி எழுதியுள்ளதாகவும், படம் வெளியிடப்படும் சமயத்தில் அப்போதைய சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து சம்பளத்தை நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Categories

Tech |