தளபதி 67 படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பாகவே பல கோடி வியாபாரம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இத்திரைப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகின்றது. இப்படத்தில் திரிஷா, பிரித்விராஜ், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே பல கோடி வியாபாரம் செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி OTT நிறுவனம் 120 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் அதன் சாட்டிலைட் மற்றும் ஹிந்தி ரீமேக் ரைட்ஸ் என மொத்தமாக 250 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது.