Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பை விரைவில் முடித்து விட வேண்டும்… ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்…!!

நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ரஜினி, படக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அதில் ‘படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு டப்பிங் பணிகளையும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் முடித்து விட வேண்டும்’ என்றும் கூறியுள்ளாராம் . இதையடுத்து கட்சிப் பணிகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதால் இந்த வேண்டுகோளை படக்குழுவினரிடம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |