தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க சித்தி இதானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்களுக்கு வெந்து தணிந்தது காடு திரைப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.
ரசிகர்கள் எதிர்பார்த்ததை போன்றே வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மின்னலே திரைப்படம் வெளியான போதே நடிகர் சிம்பு கௌதம் மேனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இந்த ஆசையே சிம்பு தன்னுடைய அப்பாவான டி. ராஜேந்திரிடமும் கூறியுள்ளார்.
அப்போது சிலர் கௌதம் மேனனுக்கு படம் இயக்கத் தெரியாது என்றும், அவருடைய நடிப்பில் நடிக்க வேண்டாம் என்றும் சிம்புவிடம் கூறியுள்ளனர். ஆனால் அந்த வதந்திகளை நம்பாத சிம்பு தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் படங்களை பின்பற்றியுள்ளார். மேலும் வாரணம் ஆயிரம் திரைப்படம் ரிலீசான பிறகு தான் இயக்குனர் சிம்புவுக்கு கௌதம் மேனனுடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததாக சிம்புவை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.