Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

படம் எடுக்கும் நல்ல பாம்பு …உரிமையாளர் வீட்டில் நுழையவிடாமல் தடுத்த நாய் ….!!!!

கடலூர் மாவட்டத்தில் சின்னங்கணாங்குப்பம் என்ற பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பிரியா வெளியில் சென்றுவிட்ட பிறகு ரொம்ப நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. நாய் குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர்  வந்து  பார்த்த போது வீட்டுக்குள் படம் எடுத்து நின்றுகொண்டிருந்தன நல்ல பாம்பு பார்த்து நாய் குரைத்துள்ளது என்று தெரிய வந்தது.

அதன்பிறகு நாய்  தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பாம்புக்கு ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் நாயை  கொத்த முயற்சி செய்தது.அதற்கு அந்த  நாய்  கொஞ்சம் கூட பயப்படாமல்  தொடர்ந்து அரை மணி நேரமாக பாம்பை இருந்த இடத்தை விட்டு  நகரவிடாமல் குறைத்துக் கொண்டே இருந்தது. இதுகுறித்து பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்த செல்லா என்பவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பாம்பை பிடித்து காப்புக் காட்டில் விட்டார்.

Categories

Tech |