Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

படம் பார்க்க வந்த ஷாலினி… ரசிகர் வைத்த கோரிக்கை… தீயாய் பரவும் வீடியோ…!!!

அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டரை வருடங்களாக திரைப்படங்கள் ரிலீஸாகாத நிலையில் சென்ற மாதம் பிப்ரவரி 24 இல் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திரைப்படத்தை கொண்டாடினர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். மேலும் போனிகபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தை பார்க்க வந்த ஷாலினியிடம் ரசிகர் ஒருவர் “ஹாய் மேடம்.. அஜித் சாரை கேட்டதாக சொல்லுங்க..” என உற்சாகத்தில் கூறியதற்கு சைகையில் ஷாலினி ஓகே சொல்வதுபோல் காட்டியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |