தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.
மேலும் சித்தி இட்ஞானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வேற லெவலில் இருப்பதாகவும் சிம்புவின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் கௌதம் இயக்கத்தில் இந்த படம் வித்தியாசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியில் வரும்போதே தலையில் முண்டாக, கழுத்தில் மாலையுடன் வந்த சுரேஷ், தண்ணீரை தன் தலையில் ஊற்றிக் கொண்டார்இது குறித்து அவரிடம் கேட்டபோது, படம் நல்ல ஓட வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை அங்க பிரவேசம் செய்த தீர்த்த தண்ணீர் என்று கூறினார். மேலும் படம் வேற லெவலில் இருப்பதாகவும் ஹீரோயிசம் கம்மியாக இருப்பதால் மற்ற ஹீரோக்கள் யாரும் இந்த படத்தில் நடிக்க மாட்டார்கள் என்றும் சிம்பு மட்டும்தான் துணிந்து நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் நீளத்தை கம்மி பண்ணினால் இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.