மயங்கி விழுந்து இறந்த முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் சாமி கோவில் எதிரே வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.