நாகூர் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தானது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது.
இதில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இதில்தான் பயணம் மேற்கொள்கின்றார்கள். இதனால் கூட்டம் அலைமோதிகொண்டு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றார்கள். இதனால் இவ்வழியாக கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.