Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் …. பொதுமக்கள் கோரிக்கை….!!

பள்ளிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திள் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளனர். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட அரசு  பள்ளிகளில் கிராமப்புறத்தை சேர்ந்த  லட்சக்கணக்கான  மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் போதிய அளவு  பேருந்துகள் இயக்கப்படாததால்  ஆபத்தான நிலையில்  மாணவர்கள் படியில்  நின்று   பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |