Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன்….. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

விபத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் ஆர்யா(14) என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர பேருந்தில் கடந்த மாதம் 8-ஆம் தேதி சிறுவன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த ஆர்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் அவரது இடுப்பு மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே படிக்கட்டில் நின்று கொண்டு மாணவர்கள் யாரும் பயணம் செய்யக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |