அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நல்லம்பாக்கம் காந்திநகரில் தச்சு தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு யுவராஜ் பயணம் செய்துள்ளார்.
இதனையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்றதும் நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராஜ் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.