Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கிய வாலிபர்கள்…. கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு பேருந்து ஓட்டுநரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் இந்திரா காந்தி நகரில் ஜான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜான் பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் தொங்கியபடியும், தரையில் கால்களை உரசியபடியும் பயணம் செய்துள்ளனர்.

இதனை பார்த்த ஜான் அந்த வாலிபர்களை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த வாலிபர்கள் ஜானின் மார்பில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து காயமடைந்த ஜான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |