Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம்…. ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக் மேட்டுப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை அசோக் சொந்த வேலை காரணமாக தனியார் பேருந்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேருந்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அசோக் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அசோக்கை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |