பெரம்பலூரில் இருந்து அரசு பேருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் ஏறிய சீனிவாசன் என்பவர் வீரகனூரில் இருந்து ஆத்தூர் நோக்கி செல்வதற்காக டிக்கெட் வாங்கியுள்ளார். அவர் படிக்கட்டில் என்ற பயணம் செய்ததால் டிரைவர் மேலே ஏறி வருமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சீனிவாசன் பேருந்து ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு வந்தவுடன் கீழே இறங்கி கற்களை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து தேவராஜ் ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.