தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சின்னகோலடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜனனி(11) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி சரியாகப் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா படிக்காமல் எப்படி வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறாயே? என கூறி தனது மகளை திட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகளை மீட்டு எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.