தாய் படிக்கச் சொல்லி திட்டியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் தாலுகாவில், சொக்கம்பட்டி போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகத்தாய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார் .செல்லச்சாமி, சண்முகத்தாய் தம்பதியரின் 17 வயதான மகள் பெனியாராஜ், கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் .
இந்நிலையில் பெனியாராஜ் படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் நன்றாக படிக்கவில்லை என சண்முகத்தாய் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது .இதனால் மனமுடைந்த பெனியாராஜ் நேற்று முன்தினம் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் மேல் பகுதியில் மின்விசிறி போட பயன்படும் இரும்பு கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.