கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை வயல்காலனியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜேஷ் குமார் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கல்லூரிக்கு சென்ற குமார் படிக்க பிடிக்கவில்லை என கூறி ஊருக்கு திரும்பி வந்தார். இதனையடுத்து கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் குமார் தனது தாயிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு கேரளாவில் வேலைக்கு சேர்ந்த தந்தை இரண்டு நாளில் ஊருக்கு வருவார். வந்தவுடன் வாங்கித் தருகிறேன் என தாய் கூறியுள்ளார். ஆனால் மன உளைச்சலில் இருந்த குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.