அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆலங்குளத்தில் கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கோரிக்கை வைத்ததற்கு, பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதுமாக 13 கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் வெறும் 4 கல்லூரிகள் அமைப்பதற்கான இடம் மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆலங்குளத்தில் புதிதாக கல்லூரி அமைப்பதற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது ஆகவே விரைந்து தமிழ்நாட்டு நான்கு புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைப்பதற்கான பணி தொடங்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்தபோது, பொறியியல் கல்லூரிகளையும் தொடங்குவதற்கான சூழல் தற்போது நாட்டில் கிடையாது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதாலும் பொறியியல் பயின்ற மாணவர்களுக்கே வேலை இல்லாத நிலை உள்ளதால் புதிய கல்லூரிகள் அமைக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.