Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படித்தது 6ஆம் வகுப்பு…. 13 ஆண்டுகளாக வக்கீல் வேடம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

6ஆம் வகுப்பு படித்து விட்டு 13 ஆண்டுகளாக வக்கீல் என கூறி ஏமாற்றிய மாற்றுதிறனாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டபள்ளி பகுதியில் மோகன கண்ணன் (40) என்பவர் வசித்து வருகின்றார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 13 ஆண்டுகளாக தான் ஒரு வக்கீல் என கூறி நடித்து குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வருவதோடு மட்டுமல்லாமல், பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன கண்ணனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சக வக்கீல்கள் இதுகுறித்து பார் அசோசியேஷன் மூலம் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த மோகன கண்ணனிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் தன்னுடைய வழக்கறிஞர் சான்றிதழ் சென்னையில் உள்ளதாகவும் பதிவு எண் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவரிடம் இருந்தது போலி சான்றிதழ் என தெரியவந்தது. மேலும் மோகன கண்ணன் 6-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, 13 ஆண்டுகளாக வக்கீல் என நம்ப வைத்து மோசடி செய்ததுஉறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |