Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

படித்துவிட்டு வேலை தேடுகிறீர்களா….? நவம்பர் 11ஆம் தேதி விருதுநகரில்…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேலைவாய்ப்பு தேடுபவர்கள் நவம்பர் 11ம் தேதி அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ கல்வித் தகுதி உடையவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்

Categories

Tech |