Categories
தேசிய செய்திகள்

படித்த மக்கள் இருப்பதால் பாஜகவால் வளர முடியவில்லை… பாஜக எம்எல்ஏ வருத்தம்…!!!

கேரளாவில் படித்த மக்கள் அதிகம் இருப்பதால் பாஜகவால் வளர முடியவில்லை என பாஜக எம்எல்ஏ ராஜகோபால் கூறியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி தாங்கள் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக வேட்புமனு பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் படித்த மக்கள் அதிகம் இருப்பதால்தான் பாஜகவால் வளர முடியவில்லை என பாஜக எம்எல்ஏ ராஜகோபால் தெரிவித்துள்ளார். கேரளாவில் 90 சதவீதம் கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார்கள். விவாத பூர்வமாக இருக்கிறார்கள். படித்த மக்களின் பண்புகளில் இது ஒரு பிரச்சனை. அதனால் எங்களால் வளர முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |